2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

20 ஆயிரம் உருத்திராட்சை மாலைகள் தயார்

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

சைவசமயிகள் தமது முழுமுதற் கடவுளான  சிவனை நினைந்து அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி விரதம், நாளை மறுதினம் (01) ஆகும்.

அதனையொட்டி, சைவசமயிகள் வாழும் பட்டி தொட்டியெல்லாம் மஹா சிவராத்திரிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை, சித்தர்களின் குரல் அமைப்பினர் சிவராத்திரியையொட்டி, பக்தர்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு, 20ஆயிரம் உருத்திராட்சை மாலைகளை தயார்படுத்தியுள்ளர்.

சித்தர்கள் குரல் அமைப்பின் மேலாளர் சிவசங்கர் ஜீ தலைமையில் மகேஸ்வரன் ஜீயின் பங்கேற்புடன், இவ் உருத்திராட்சை மாலைகள் நேற்று வரை மட்டக்களப்பு நகரில் தயார்படுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X