2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

19 நாள்களின் பின் விடுவிக்கப்பட்ட பகுதிகள்

Princiya Dixci   / 2021 ஜூன் 30 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் சில விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 11ஆம் திகதி, மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டிருந்தன.

இந்த மூன்று பிரதேசங்களும் 19 நாள்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியை விடுவிப்பு செய்ய உதவிய மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.கருணாகரன், இங்கு கடமையில் ஈடுபட்டிருந்த  இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர்களுக்கு ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .