Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 25 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றில், பசளையுடன் உப்புக்கலந்து விற்பனை செய்யப்படவிருந்த 181 கலப்படப்பசளைப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்முனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் அரிசி ஆலையொன்றிலேயே குறித்த கலப்பட உரப்பொதிகள் பிடிபட்டன.
இராணுவ புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (24) மாலை இராணுவ புலனாய்வுப்பிரிவு மற்றும் திருக்கோவில் விஷேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து இதனைக் கைப்பற்றினர்..
இதில் சிவப்பு நிற MOP பசளைகளை உப்புடன் கலந்து விற்பனை செய்வதற்கு, உப்பினை உலர வைத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இது கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் உப்பு கலக்கப்படாத 50 கிலோ பொதி கொண்ட 92 MOP பசளை பொதிகளும், உப்புக்கலப்படம் செய்து விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 பொதிகளும் கைப்பற்றப்பட்டதுடன், உற்பத்தி செய்யப்படும் நிலையிலிருந்த சுமார் 150 இற்கும் அதிகமான பைகள் மதிக்கத்தக்க உப்பு மற்றும் MOP பசளை கலந்த குவியல்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், உலர வைக்கப்பட்ட உப்பு மற்றும் MOP பசளைகளிலிருந்து சராசரியாக 500 பொதிகள் பொதியிட முடியும் எனவும் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை விற்பனை செய்யப்படவிருந்த சில பொதிகளில் அரச இலட்சினை பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் இந்தக் கலப்பட வேலையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .