2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

18 பொலிஸாருக்கு நெகட்டிவ்

Princiya Dixci   / 2021 மார்ச் 15 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.டில்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அவருடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மேற்படி 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகளும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 11 நபர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகளும், மட்டக்களப்பு   சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பகுதியில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்டன. 

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதாரப் பரிசோதகர்களால் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது, 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு பொலிஸ்  உத்தியோகத்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்று  இல்லை.

இதேவேளை, 11 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட  பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கான அறிக்கைகள் கிடைக்கப்படவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X