2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

1440 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Janu   / 2024 மே 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த  கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கட்திச் சென்ற ஒருவரை மட்டு ரயில்வே வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய விசேட அதிரடிப்படை  குழுவினர் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து மட்டக்களப்பு ரயில்வே குறுக்கு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே  குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் போது காரில் இருந்து 1440 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .