2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவைகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிலக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .