2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

12 மணிநேரத்தில் 41 தொற்றாளர்கள்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் இன்று (29) காலை 6 மணியுடன் முடிவடைந்த 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தொவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 12 மணி நேரத்தில் கல்முனை தெற்கில் 24 பேரும் கல்முனை வடக்கில் 3 பேரும் காத்தான்குடியில் 4 பேரும் மட்டக்களப்பு, வெல்லாவெளி, ஆரையம்பதி, தமண, கோமரன்கடவல, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பகுதியளில் தலா ஒருவருமாக 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் இதுவரை தொற்றாளர்கள் தொற்றாளர்கள் 1,058 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கொரோனா தொற்றுக்காரணமாக கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 4 மரணங்களும் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் ஒன்று உட்பட 5 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .