Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 மே 02 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் 100 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கு அமைய, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் இவ்விடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நிர்வாகத்தினர் உரிய ஆசிரியர்களிடம் கையளித்து வருகின்றனர்.
குறித்த வலயத்தில் கடமையாற்றி வேறுவலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கே, எதிர்வரும் 18.05.2022 முதல் செயற்படும் வண்ணம் இவ்விடமாற்றக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இடமாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இணையாக இவ்வலயத்திற்கு, வேறு வலயங்களில் இருந்து அல்லது புதிய நியமனங்கள் மூலமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நியமிக்கப்படாவிட்டால், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படையும். எனவே, போதுமான ஆசிரியர் வளம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி அமைப்புக்கள் விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
2 hours ago