2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

ஹலான்டுக்கு கணுக்கால் காயம்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் போர்ண்மெத்துக்கெதிரான காலிறுதிப் போட்டியின்போது மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் எர்லிங்க் ஹலான்ட் கணுக்கால் காயத்துக்குள்ளானதாக அக்கழகம் திங்கட்கிழமை (31) தெரிவித்துள்ளது.

ஹலான்டின் முழுமையான காயம் குறித்து அறிவதற்கு மேலதிக சோதனைகள் தேவைப்படுகிறது.

குறித்த போட்டியில் கோலைப் பெற்றிருந்த ஹலான்ட், 61ஆவது நிமிடத்தில் பிரதியிடப்பட்டிருந்தார்.

அந்தவகையில் மாத இறுதியில் நடைபெறவுள்ள நொட்டிங்ஹாம் பொரெஸ்டுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் ஹலான்ட் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X