2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

ஸ்டோக்ஸை அணித்தலைவராக முன்மொழியும் மோர்கன்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 31 , பி.ப. 03:38 - 0     - 6

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கான புதிய தலைமைத்துவத்தில் இங்கிலாந்து புதியதொரு வழியை தேர்ந்தெடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸை முக்கிய தொடர்களில் அணித்தலைமைப் பொறுப்பை வழங்கலாமென இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஸ்டோக்ஸின் உப அணித்தலைவர் பெரும்பாலான இரு தரப்புத் தொடர்களுக்கு தலைமை தாங்கலாமென்றும், உலகக் கிண்ணங்களுக்கு ஸ்டோக்ஸ் தலைமை தாங்கலாமெனவும் மோர்கன் கூறியுள்ளார்.

முன்னதாக ஸ்டோக்ஸை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைமைத்துவத்திற்கு கருத்திற் கொள்ளாமல் விடுவது முட்டாள்தனமெனக் கூறியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஸ்டோக்ஸ் விளையாடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண போட்டிகளுக்கான் அணித்தலைமைப் போட்டியிலிருந்து முன்னாள் அணித்தலைவர் ஜோ றூட் ஏற்கெனவே விலகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X