2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த மூன்றாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில், பிறிஸ்பேணில் சனிக்கிழமை (14) ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இந்தியா ட்ரெவிஸ் ஹெட்டிடம் ஆகாஷ் டீப்பை 31 ஓட்டங்களுடன் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களையே பெற்றது.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஜஸ்பிரிட் பும்ரா (3), ஆகாஷ் டீப் (2), மொஹமட் சிராஜ்ஜிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.

அந்தவகையில் 275 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா விக்கெட் இழப்பின்றி எட்டு ஓட்டங்களைப் பெற்றதுடன் மழை குறுக்கிட்ட நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஹெட் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X