2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

விமானப்படை விளையாட்டு விருது வழங்கும் விழா

Editorial   / 2025 மார்ச் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024/2025 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இலங்கை விமானப்படை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின்   சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் விமானப்படை விளையாட்டு கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட" விமானப்படை விளையாட்டு விருது வழங்கும் விழாஇலங்கை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் தலைமையில் மார்ச் 26 நடைபெற்றது.

இதன்போது 2024/2025 பாதுகாப்பு சேவைகள் சாம்பியன்ஷிப் மற்றும் 2024 தேசிய சாம்பியன்ஷிப் இரண்டையும் வென்ற பெண்கள் மல்யுத்த அணி, பெண்கள் கைப்பந்து அணி, 2024 தேசிய சாம்பியன்ஷிப்பை வென்ற பெண்கள் குத்துச்சண்டை அணி, பெண்கள் ஜூடோ அணி மற்றும்  2025 இலங்கை விமானப்படை சைக்கிள் சவாரியில் வெற்றிபெற்ற  பெண்கள் சைக்கிள் ஓட்டுதல் அணி, 2024/2025 பாதுகாப்பு சேவைகள் சாம்பியன்ஷிப்பை வென்ற அணிகள் மற்றும் வீரர்கள், மகளிர்  கைப்பந்து  அணி, ஆண்கள் வில்வித்தை அணி, மகளிர் வில்வித்தை அணி, மகளிர் டேக்வாண்டோ அணி, மகளிர் பளு தூக்குதல் அணி, ஆண்கள் ஸ்குவாஷ் அணி, ஆண்கள் கைப்பந்து அணி, மகளிர் நெட்பால் அணி, மகளிர் கோல்ஃப் அணி மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 2024 ஆசிய நெட்பால் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி, சிறப்பாக விளையாடி இலங்கை விமானப்படைக்கு பெருமை சேர்த்த கோப்ரல் ரஷ்மி பெரேரா உட்பட. 184 விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படைத் தளபதி ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார்.

மேலும், விமானப்படையின் விளையாட்டு சாதனைகளுக்கு மூலோபாய உத்திகளை முறையாக செயல்படுத்தி வெற்றிகளை வெற்றிகளாக மாற்றியதன் மூலம் பங்களித்த மல்யுத்த அணியின் பயிற்சியாளர்களான சார்ஜென்ட் வசந்த குமார, கைப்பந்து மகளிர் அணியின் பயிற்சியாளர் கோப்ரல்  நிலங்க ருக்ஷன், குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளர் திரு. சம்பத் ஜெயதிலக மற்றும் ஜூடோ அணியின் பயிற்சியாளர்   பள்ளியகுருகே சுனில் ஆகியோருக்கு விமானப்படைத் தளபதியினால்  ரொக்கப் பரிசுகள் மற்றும் கேடயங்களும்  வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X