2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டது செல்சி

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து செல்சி வெளியேற்றப்பட்டது.

விலகல் முறையிலான இத்தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து செல்சி வெளியேறியது.

பிறைட்டன் சார்பாக ஜோர்ஜினியோ ருட்டர், கெளரு மிட்டோமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செல்சியின் கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை தமது மைதானத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற போர்ண்மெத்துடனான நான்காவது சுற்றுப் போட்டியில்; 0-2 என்ற கோல் கணக்கில் தோற்று எவெர்ற்றனும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .