2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

லக்னோவின் போட்டியில் ஆகாஷ் டீப்?

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), இன்று நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸுக்கெதிரான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸின் அணித் தெரிவுக்கு இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் டீப் தயாராகவிருப்பாரெனக் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது முதுகுப் பகுதி உபாதைக்குள்ளான டீப்,  கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பருக்குப் பின்னர் எதுவிதப் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கவில்லை.
2024ஆம் ஆண்டு ஐ.பி.எல்லில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருரைப் பிரதிநிதித்துவப்படுத்திய டீப், இதுவரையில் லக்னோவுக்காக அறிமுகத்தை மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X