2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

றியல் மட்ரிட் செல்லும் பெர்ணாண்டஸ்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரான புரூனோ பெர்ணாண்டஸைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமது அணித்தலைவர் லூகா மோட்ரிச்சுக்கான பிரதியீடாக மத்தியகளவீரரான பெர்ணாண்டஸை றியல் மட்ரிட் நோக்குவதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து றியல் மட்ரிட்டை விட்டு மத்தியகளவீரான மோட்ரிச் வெளியேறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

யுனைட்டெட்டுடன் 2027ஆம் ஆண்டு வரையும், அதை ஓராண்டால் நீடிக்கக்கூடிய ஒப்பந்தத்தில் 30 வயதான பெர்ணாண்டஸ் உள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X