2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ராஜஸ்தானுக்கும் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுப்பாரா ட்ராவிட்?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 20 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ஆரம்பப் பருவகாலத்தில் 2008ஆம் ஆண்டு சம்பியனானதன் பிற்பாடு 17ஆவது முறையாக கிண்ணத்தை எதிர்பார்த்து களமிறங்கும் ராஜஸ்தான் றோயல்ஸ், இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை 2007ஆம் ஆண்டு ஆரம்பத் தொடருக்குப் பின்னர் கடந்தாண்டு பெற்றுக் கொடுத்த ராகுல் ட்ராவிட்டை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

கடந்த முறை மூன்றாமிடத்தைப் பெற்றிருந்த ராஜஸ்தான், ஜொஸ் பட்லர், யுஸ்வேந்திர சஹால், இரவிச்சந்திரன் அஷ்வின், ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களை விடுவித்திருந்தது. ஏலத்தில் ஜொஃப்ரா ஆர்ச்சர், வனிது ஹசரங்க, ஆகாஷ் மத்வால், துஷார் தேஷபந்தே, மகேஷ் தீக்‌ஷன ஆகியோரை வேண்டியமை மூலம் பந்துவீச்சுப் பக்கம் சந்தீப் ஷர்மாவும் ஏற்கெனவே இருக்கின்ற நிலையில் பிரச்சினை இருக்காது.

இந்நிலையில் யஷஷ்வி ஜைஸ்வால், சஞ்சு சாம்ஸன், நிதிஷ் ரானா, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஷிம்ரோன் ஹெட்மயரில் யாராவது சொதப்பினால் குறிபிட்டுச் சொல்லக்கூடிய பிரதியீடுகள் எவையுமில்லாததும், இறுதி நேரத்தில் அதிரடியாக ஓட்டங்களைப் பெறக்கூடிய வீரர்கள் இல்லாததே மிகப் பெரிய பின்னடைவாகக் காணப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: 1. யஷஸ்வி ஜைஸ்வால், 2. சஞ்சு சாம்சன், 3. நிதிஷ் ரானா, 4. ரியான் பராக், 5. துருவ் ஜுரேல், 6. ஷிம்ரோன் ஹெட்மயர், 7. வனிது ஹசரங்க, 8. ஜொஃப்ரா ஆர்ச்சர், 9. ஆகாஷ் மத்வால், 10. மகேஷ் தீக்‌ஷன, 11. சந்தீப் ஷர்மா

தாக்கம் செலுத்தும் வீரர்கள்: துஷார் தேஷபந்தே, ஷுபம் டுபே, குமார் கார்த்திகேயா, யுட்விர் சிங், பஸல்ஹக் பரூக்கி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .