Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஜூன் 16 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
17-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் சனிக்கிழமை (15) தொடங்கியது. 24 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் முதல் லீக்ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்துடன் மோதியது.
ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி அணி5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது ஜெர்மனி அணி. இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி 3-0 என்ற கோல்கணக்கில் துருக்கியை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது ஜெர்மனி முறியடித்துள்ளது. மேலும் பெரிய தொடர்களில் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து வந்த சோகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஜெர்மனி அணி. அந்த அணி 2018 மற்றும் 2022உலகக் கோப்பை தொடரிலும் 2021-ம் ஆண்டு யூரோ கோப்பை தொடரிலும் தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது.
சுவிட்சர்லாந்து வெற்றி: ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - ஹங்கேரி அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில்12-வது நிமிடத்தில் க்வாடோ துவாவும், 45-வது நிமிடத்தில் மைக்கேல் எபிசரும், 90-வது நிமிடத்தில் ப்ரீல் எம்போலோவும் தலா ஒரு கோல்அடித்தனர். ஹங்கேரி அணி தரப்பில் 66-வது நிமிடத்தில் பர்னபாஸ் வர்கா கோல் அடித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago