2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

மொஷின் கானை பிரதியிட்ட ஷர்துல் தாக்கூர்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 24 , பி.ப. 02:30 - 0     - 9

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் குழாமில் மொஷின் கானின் பிரதியீடாக ஷர்துல் தாக்கூர் இணைந்துள்ளார்.

நடப்பாண்டு ஐ.பி.எல்லுக்கு முந்தைய ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத தாக்கூர், கடந்த பருவகாலத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

மொஷின் தவிர மாயங்க் யாதவ், ஆவேஷ் கான், ஆகாஷ் டீப் என லக்னோவின் மற்றைய மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் பெங்களூருவிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மய்யத்தில் காயத்திலிருந்து மீண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X