2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மேட்ச் பிக்சிங்: பெச்சலோடியாவுக்கு சிறை

Editorial   / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ராயல் பஞ்சாப் அணியின் முகாமையாளராக இருந்தபோது போட்டிகளை காட்டிக்கொடுக்குமாறு  (மேட்ச் பிக்சிங்) இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிலிம்ஸ்டெட் மற்றும் நியூசிலாந்து வீரர் நில் ப்ரூவுக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் மேலாளர் பெச்சலோடியா ஆகாஷுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி தர்ஷிகா தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, செவ்வாய்க்கிழமை (27) வழங்கப்பட்டது. மேலும், ஐந்தரை மில்லியன் ரூபாய் என இரண்டு தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு தலா 11 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தார்.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற "லெஜண்ட் டிராபி 2024" கிரிக்கெட் போட்டியில் பணத்திற்காக வெளிநாட்டு வீரர்களை ஏமாற்றியதாக இரண்டு அதி குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகளின் விசாரணை தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க விளையாட்டு குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில்,

அரசு தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்கவும், பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பனவும் ஆஜராகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X