2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

முத்தரப்புத் தொடர்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுடனான தமது முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, லாகூரில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட மத்தியூ பிரெட்ஸ்கே, வியான் முல்டரின் 64 (60), ஜேஸன் ஸ்மித்தின் 41 (51) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மற் ஹென்றி, வில் ஓ'ருர்க் ஆகியோர் தலா 2, மிஷெல் பிறேஸ்வெல் ஒரு விகெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 305 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கேன் வில்லியம்சனின் ஆட்டமிழக்காத 133 (113), டெவோன் கொன்வேயின் 97 (107) ஓட்டங்களோடு 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட செனுரன் முத்துசாமி 2, அறிமுகத்தை மேற்கொண்ட ஈதன் பொஷ் மற்றும் ஜூனியர் டலா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக வில்லியம்சன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X