2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 28 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், புலவாயோவில் வியாழக்கிழமை (26) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே ஷோன் வில்லியம்ஸின் 154, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 110, அணித்தலைவர் கிறேய்க் எர்வினின் 104, பென் கர்ரனின் 68, தகுட்ஸ்வனஷே கைட்டானோவின் 46 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 586 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார் 3, ஸியா-உர்-றெஹ்மான் 2, நவீட் ஸட்ரான், ஸகிர் கான் 2, அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான், ரஹ்மத் ஷாவின் ஆட்டமிழக்காத 231, அணித்தலைவர் ஹஷ்மதுல்லாஹ் ஷகிடியின் ஆட்டமிழக்காத 141 ஓட்டங்களோடு இன்றைய (28) மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 425 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில், பிளஸிங்க் முஸர்பனி, ட்ரெவர் குவான்டு ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X