2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

முதற் தடவையாக பாகிஸ்தானை வென்ற பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதற் தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் பாகிஸ்தானை பங்களாதேஷ் வென்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், ராவல்பின்டியில் புதன்கிழமை (21) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (25) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியை வென்றமையையடுத்தே பாகிஸ்தானுக்கெதிராக தமது முதலாவது வெற்றியை டெஸ்டில் பாகிஸ்தான் பதிவு செய்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், மொஹமட் றிஸ்வானின் ஆட்டமிழக்காத 171, செளட் ஷகீலின் 141, சைம் அயூப்பின் 56 ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், ஹஸன் மஹ்மூட், ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மெஹிடி ஹஸன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், முஷ்பிக்கூர் ரஹீமின் 191, மெஹிடி ஹஸன் மிராஸின் 77, லிட்டன் தாஸின் 56, மொமினுல் ஹக்கின் 50 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 565 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், நசீம் ஷா 3, ஷகீன் ஷா அஃப்ரிடி, குராம் ஷஷாட், மொஹமட் அலி ஆகியோர் தலா 2, சைம் அயூப் ஆகியோர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஷொரிஃபுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூட், நஹிட் ரானா, ஷகிப் அல் ஹஸன் (3), மெஹிடி ஹஸன் மிராஸிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் றிஸ்வான் 51, அப்துல்லா ஷஃபிக் 37 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 30 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது. ஸகிர் ஹஸன் ஆட்டமிழக்காமல் 15, ஷட்மன் இஸ்லாம் ஆட்டமிழக்காமல் ஒன்பது ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்பட்டனர்.

இப்போட்டியின் நாயகனாக ரஹீம் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X