2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

முகாமையாளர் மொட்டாவை நீக்கிய ஜுவென்டஸ்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 25 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


முகாமையாளர் தியாகோ மொட்டாவை இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ் நீக்கியதாகவும், முன்னாள் வீரர் இகோர் ட்யூடரை நியமித்துள்ளதாகவும் அக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான இரண்டு தோல்விகளையடுத்து சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகின்றது.

கடந்தாண்டு ஜூன் மாதம் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் மொட்டா நியமிக்கப்பட்டிருந்தார்.

பருவகால முடிவு வரையில் ட்யூடோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெற்றால் ஓராண்டுக்கு புதுப்பிக்கக்கூடியதாகவுள்ளதாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X