Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 22 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிய மூன்று நாள்களில், விசாகப்பட்டினத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மோதவுள்ளன.
அடுத்தாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான தயார்படுத்தலுக்கான ஆரம்பப் புள்ளியாக ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடர் அமைகின்றது.
அவுஸ்திரேலியாவில் பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க், மிற்செல் மார்ஷ், டேவிட் வோர்னர், கமரோன் கிறீன் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் இடம்பெற்றுள்ள ஸ்டீவன் ஸ்மித் அதிகம் கவனம் பெற்றவராகக் காணப்படுகின்றார். ஸ்மித்திடமிருந்து வேகமாக ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தவிர மத்தியூ ஷோர்ட், ஜொஷ் இங்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், தன்வீர் சங்கா ஆகியோருக்கு தம்மை நிரூபிப்பதற்கு இத்தொடர் வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
இதேபோன்றே மறுபக்கமாக ருத்துராஜ் கைகவாட், ஷிவம் டுபே, யஷஷ்வி ஜைஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, திலக் வர்மா, ஆவேஷ் கான், அர்ஷ்டீப் சிங் ஆகியோருக்கு தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago