Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இலங்கையின் மகேஷ் தீக்ஷன முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய இந்தியாவின் குல்தீப் யாதவ், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கெதிரான முத்தரப்பு இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் மிற்செல் சான்ட்னெர், 12ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. மகேஷ் தீக்ஷன, 2. ரஷீட் கான், 3. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 4. குல்தீப் யாதவ், 5. ஷகீன் ஷா அஃப்ரிடி, 6. கேஷவ் மஹராஜ், 7. மிற்செல் சான்ட்னெர், 8. மற் ஹென்றி, குடகேஷ் மோட்டி, 10. மொஹமட் சிராஜ்.
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டியில் 112 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஷுப்மன் கில், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் 87 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் ஹெய்ன்றிச் கிளாசென், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானுக்கெதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் 57 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு போட்டிகளில் 205 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் சரித் அசலங்க, 16ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டியில் 78 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஷுப்மன் கில், 2. பாபர் அஸாம், 3. றோஹித் ஷர்மா, 4. ஹெய்ன்றிச் கிளாசென், 5. டரைல் மிற்செல், 6. விராட் கோலி, 7. ஹரி டெக்டர், 8. சரித் அசலங்க, 9. ஷ்ரேயாஸ் ஐயர், 10. ஷே ஹோப், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ்
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. மொஹமட் நபி, 2. சிகண்டர் ராசா, 3. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. ரஷீட் கான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago