Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 20 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முடிவடைந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் 13ஆவது உலகக் கிண்ணத் தொடரில் போட்டியொன்றில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 (128) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றின் மிகச் சிறந்த இனிங்ஸாகக் கருதப்படும் குறித்த இனிங்ஸை ஆப்கானிஸ்தானுக்கெதிரான லீக் போட்டியில் 292 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடும்போது அவுஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த பிற்பாடே மக்ஸ்வெல் பெற்றிருந்தார்.
இதேவேளை, மக்ஸ்வெல்லுக்கு அடுத்ததாக பங்களாதேஷுக்கெதிரான லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மிற்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 177 (132) ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், மூன்றாமிடத்தில் குயின்டன் டி கொக்கும் பங்களாதேஷுக்கெதிரான லீக் போட்டியில் 174 (140) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago