2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சம்பியனானது இலங்கை

Editorial   / 2024 ஜூலை 28 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையின் தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்றியில் வென்ற இந்திய அணி  முதலில் துடுப்பாடுவதற்கு தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.

166 ஓட்டங்களள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் விஷ்மி குணரத்னே ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் ஹர்ஷிதா மற்றும் கேப்டன் சமரி அத்தப்பத்து இணைந்து 87 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சமரி அத்தப்பத்து, 43 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது 12 ஓவர்களில் 94 ஓட்டங்கள் எடுத்திருந்தது இலங்கை.

 

சிறப்பாக ஆடிய ஹர்ஷிதாவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் கவிஷா விளையாடி இருந்தார். இறுதியில் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை அணி இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது. ஹர்ஷிதா 69 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கவிஷா 30 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. கேட்ச்களை டிராப் செய்தது பாதகமாக அமைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X