2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

போட்டியின்போது தமிமுக்கு மாரடைப்பு

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 25 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்களாதேஷின் சவாரில் நடைபெற்ற டாக்கா பிறீமியர் பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியொன்றின்போது பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் தமிம் இக்பாலுக்கு மாரடைப்பொன்று ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிமுக்கு இரத்தக்குழாய் சீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட அவசர சத்திர சிகிச்சையொன்றைத் தொடர்ந்து தமிம் மீள நினைவுக்கு வந்ததாகவும், குடும்ப உறுப்பினரொருவருடன் கதைத்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மொஹம்மெடான் ஸ்போர்ட்டிங் கழகத்துக்குத் தலைமை தாங்கிய தமிம், போட்டியின் முதலாவது இனிங்ஸில் ஒரு ஓவர் மாத்திரமே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தனர்.

முதல் வைத்தியசாலைக்குச் சென்ற தமிம், வைத்தியர்கள் அறிவுறுத்தியபோதும் மீண்டும் மைதானத்துக்கு திரும்பியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X