2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பொரெஸ்டிடம் தோற்ற சிற்றி

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 09 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.

பொரெஸ்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் ஹட்சன்-ஒடோய் பெற்றிருந்தார்.
இந்நிலையில் வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பொரெஸ்டும், 47 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் சிற்றியும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட ஆர்சனல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளதுடன், லிவர்பூல் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X