2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பெல்ஜிய மீள்வருகைக்குத் தயாராகியுள்ள கோர்துவா

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியம் தேசிய அணித் தெரிவுக்கு மீண்டும் தயாராகியுள்ளதாக அவ்வணியின் கோல் காப்பாளர் திபோ கோர்துவா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில்  அடுத்த மாதம் 32 வயதான கோர்துவா அணிக்குத் திரும்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னைய பயிற்சியாளர் டொமெனிக்கோ டெடெஸ்கோவின் கீழ் விளையாட கோர்துவா மறுத்த நிலையில், தற்போது அவர் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே கோர்துவா அணிக்குத் திரும்ப ஏதுவாக உள்ளது.

அணித்தலைமை வழங்கப்படாதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கோர்துவா விளையாடவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X