2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பி.எஸ்.எல்: கராச்சி கிங்ஸின் அணித்தலைவராக வோர்னர்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 26 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் 10ஆவது பருவகாலத் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டேவிட் வோர்னர் தலைமை தாங்கவுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வீரர் தெரிவின்போது அவ்வணியால் முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட வோர்னர், ஷண் மசூட்டை அணித்தலைவராகப் பிரதியிட்டுள்ளார்.

பந்தைச் சேதப்படுத்திய 2018ஆம் ஆண்டு பிரச்சினையைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியால் அணித்தலைவராவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாட் தடை கடந்தாண்டே நீக்கப்பட்டு பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸுக்கு தலைமை தாங்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X