2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாகிஸ்தானைத் தோற்கடித்த இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2024 மே 26 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

பேர்மிங்ஹாமில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பில் ஸோல்டை இமாட் வசீமிடம் இழந்தது. பின்னர் அணித்தலைவர் ஜொஸ் பட்லரும், வில் ஜக்ஸும் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 37 (23) ஓட்டங்களுடன் ஹரிஸ் றாஃப்பிடம் ஜக்ஸ் வீழ்ந்தார்.

தொடர்ந்தும் வேகமாக ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் பெயார்ஸ்டோ, ஹரி ப்ரூக் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஷகீன் ஷா அஃப்ரிடி, இமாட்டிடம் வீழ்ந்தனர். சிறிது நேரத்தில் 84 (51) ஓட்டங்களுடன் றாஃப்பிடம் பட்லர் வீழ்ந்ததோடு, அடுத்த அஃப்ரிடியின் ஓவரில் மொயின் அலியும், கிறிஸ் ஜோர்டானும் விழ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை இங்க்கிலாந்து பெற்றது.

பதிலுக்கு 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே மொஹமட் றிஸ்வானும், சைம் அயூப்பும் மொயின் அலி, றீஸ் டொப்லியிடம் வீழ்ந்தனர். பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் பாபர் 32 (26) ஓட்டங்களுடன் மொயினிடம் வீழ்ந்ததோடு, ஷடாப் கான் அடில் ரஷீட்டிடம் வீழ்ந்தனர்.

இரண்டு ஓவர்களில் ஜொஃப்ரா ஆர்ச்சரிம் அஸாம் கான் வீழ்ந்ததோடு, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய பக்கர் ஸமன் 45 (21) ஓட்டங்களுடன் அடுத்த ஓவரில் லியாம் லிவிங்ஸ்டோன் வீழ்ந்தார். பின்னர் இஃப்திஹார் அஹ்மட் டொப்லியிடம் வீழ்ந்ததோடு, இமாட் 22 (13) ஓட்டங்களோடு ஆர்ச்சரிடம் வீழ்ந்ததோடு, மொஹமட் ஆமிர் ஜோர்டானிடம் வீழ்ந்தார்.

இறுதியில் ஷகீன் ஷா அஃப்ரிடியும் டொப்லியிடம் விழ 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களையே பெற்று 23 ஓட்டங்களால் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக பட்லர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .