2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரிலிருந்து லேதம் விலகல்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 28 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து நியூசிலாந்தின் டொம் லேதம் விலகியுள்ளார்.

பயிற்சியின்போதான கை முறிவு காரணமாகவே தொடரிலிருந்து லேதம் விலகியுள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு மிஷெல் பிறேஸ்வெல் தலைமை தாங்கவுள்ளார்.

குழாமில் லேதமை ஹென்றி நிக்கொல்ஸ் பிரதியுட்டுள்ளார்.

மிற்ச் ஹே விக்கெட் காப்பாளராக கடமையாற்றவுள்ளார்.

இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியுடன் வில் யங், தனது முதலாவது குழந்தை பிறப்பு காரணமாக குழாமிலிருந்து வெளியேறுகிறார்.

யங்குக்குப் பதிலாக புதுமுகவீரர் றீஸ் மரியு குழாமில் இடம்பெறவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X