2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில் தங்கம் வென்ற விக்னராஜாவுக்கு பாராட்டு

Editorial   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற விக்னராஜ் விக்னராஜாவை அந்த தோட்ட மக்கள்  மக்கள் அன்புடன் வரவேற்றனர்.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கிராஸ்-கன்ட்ரி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தங்கப் பதக்கம் வென்ற விக்னராஜ் விக்னராஜாவை  வரவேற்கும் விழா, அவரது பிறந்த இடமான தலவாக்கலையில் மில்லிடன் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (25)நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த விக்னராஜ் விக்னராஜா, இலங்கை இராணுவத்தின் விளையாட்டுப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (23)  நடைபெற்ற தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 கி.மீ தூரத்தை 31 நிமிடங்கள் 56 செக்கன்கள் 38 மில்லி செக்கன்களில் ஓடி, முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X