2025 ஜனவரி 29, புதன்கிழமை

பாகிஸ்தானின் பயிற்றுவிப்பாளராக ஆகிப்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 19 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரையில் பாகிஸ்தானின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிஃப் ஜாவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது.

கரி கேர்ஸ்டன் இராஜினாமா செய்ததையடுத்து ஜேஸன் கிலெஸ்பி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே அவரை ஆகிஃப் பிரதியிடவுள்ளார்.

இதேவேளை தேர்வாளர் குழுவின் சிரேஷ்ட உறுப்பினராக தொடர்ந்தும் ஆகிஃப் கடமையாற்றவுள்ளதுடன், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து அவருக்கு மேலதிக பொறுப்புகள் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .