2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பாகிஸ்தானின் குழாமில் நசீம், அப்பாஸ் இல்லை

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 12 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, ஆமிர் ஜமால், மிர் ஹம்ஸா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஷகீன் ஷா அஃப்ரிடியும் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக சைம் அயூப், விக்கெட் காப்பாளர் ஹசீபுல்லாஹ் கானும் மற்றும் அப்துல்லாஹ் ஷஃபிக்கும் குழாமில் இடம்பெறாத நிலையில் இமாம்-உல்-ஹக், றொஹைல் நஸீர், முஹமட் ஹுரைரா ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: ஷண் மசூட் (அணித்தலைவர்), இமாம்-உல்-ஹக், மொஹமட் ஹுரைரா, பாபர் அஸாம், கம்ரான் குலாம், செளட் ஷகீல் (உப அணித்தலைவர்), மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), றொஹைல் நஸிர் (விக்கெட் காப்பாளர்), சல்மான் அக்ஹா, நோமன் அலி, சஜிட் கான், அப்ரார் அஹ்மட், குராம் ஷஷாட், மொஹமட் அலி, கஷிஃப் அலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .