Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவரான கிறேய்க் பிறத்வெய்ட் பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில் புதிய அணித்தலைவரின் கீழ் அடுத்த சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பிக்கவுள்ளது.
பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயண முடிவிலேயே பதவி விலகும் முடிவை பிறத்வெய்ட் கோடிட்டுக் காட்டியாதாக கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியுள்ளது.
பிறத்வெய்ட்டின் கீழ் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 39 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், 22 போட்டிகளில் தோற்றுள்ளது. 2021ஆம் ஆண்டிலிருந்தே நிரந்தர அணித்தலைவராக பிறத்வெய்ட் மாறியிருந்தார்.
பிறத்வ்யெட்டின் கீழ் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான தொடரை வென்றதுடன், பாகிஸ்தானில் இம்முறை தொடரைச் சமப்படுத்தியதுடன், பிறிஸ்பேணில் அவுஸ்திரேலியாவுக்கெதிராக வென்றதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
மேற்கிந்தியத் தீவுகளின் அடுத்த டெஸ்ட் தொடராக அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடருக்கு மூன்று மாதங்கள் இருக்கையில், புதிய அணித்தலைவர் எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படுவாரென சபை கூறியுள்ளது.
இதேவேளை இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராகவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷே ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் சமியின் ஆலோசனையைத் தொடர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாக சபை வெளிப்படுத்தியுள்ளது.
றொவ்மன் பவலையே ஹோப் பிரதியிட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு அணித்தலைவராக நியமிக்கப்பட்ட பவலின் கீழ் இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடர்களை மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
25 minute ago
1 hours ago