2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பதவி விலக விரும்பும் ஷன்டோ

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகும் தனது விருப்பத்தை நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ வெளிப்படுத்தியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டே அணித்தலைமையில் தனது இறுதிப் போட்டியாக இருக்க விரும்புவதாக ஷன்டோ கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

முதலாவது டெஸ்ட் தோல்வியைத் தொடர்ந்தே இச்செய்தியை ஷன்டோ அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சபையின் தலைவர் பரூக் அஹ்மட் பங்களாதேஷில் இல்லாததால் இம்முடிவை சபை இன்னும் ஆராயவில்லை.

ஷன்டோவின் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் புதிய அணித்தலைவரை உடனடியாக சபை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தானுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி நொவெம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு நொவெம்பரில் அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து ஷன்டோவின் சராசரி 25.76 ஓட்டங்களாகக் காணப்படுகிறது. எவ்வாறாயினும் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் வெற்றியொன்றை ஷன்டோ கடந்தாண்டு பெற்றுக் கொடுத்ததுடன், பாகிஸ்தானுக்கெதிராக இவ்வாண்டு ஓகஸ்ட்டில் டெஸ்ட் தொடர் வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .