2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 12 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்ற நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலமே 2-1 என்ற ரீதியில் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 244/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மஹ்முதுல்லாஹ் 98 (98), மெஹிடி ஹஸன் மிராஸ்  66 (119) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 4/37, மொஹமட் நபி 1/37, ரஷீட் கான் 1/40)

ஆப்கானிஸ்தான்: 246/5 (48.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 101 (120), அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் ஆ.இ 70 (77), மொஹமட் நபி ஆ.இ 34 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிட் ரானா 2/40, முஸ்தபிசூர் ரஹ்மான் 2/50, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/56)

போட்டியின் நாயகன்: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய்

தொடரின் நாயகன்: மொஹமட் நபி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X