2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற நியூசிலாந்து, ஹமில்டனில் புதன்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை நியூசிலாந்து உறுதி செய்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, மிற்செல் ஹேயின் ஆட்டமிழக்காத 99 (78), முஹமட் அப்பாஸின் 41 (66), நிக் கெல்லியின் 31 (23) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சுஃபியான் முக்கீம் 2, பாஹீம் அஷ்ரப், அகிஃப் ஜாவிட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 293 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், வில் ஓ ருர்க், ஜேக்கப் டஃபி (3), பென் சியர்ஸ் (5), நாதன் ஸ்மித்திடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 41.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களையே பெற்று 84 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் பஹீம் அஷ்ரஃப் 73 (80), நசீம் ஷா 51 (44) ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக ஹே தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X