Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூலை 24 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிகேஜி கபில
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 20-53 கிலோ எடைக்குட்பட்ட எடைப்பிரிவின் கீழ் போட்டியிட்ட பொருத்தோட்ட வீராங்கனை நெத்மி அஹிம்சா பெர்னாண்டோ, நாட்டை வந்தடைந்தார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இந்தப் பிரிவின் கீழ் வெண்கலப் பதக்கத்தை வென்ற இவர் புதன்கிழமை (24) காலை 09.30 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய போர்த்துதோட்டையின் நெத்மி அஹிம்சா பெர்னாண்டோ 20 வயதுக்குட்பட்ட 53 கிலோ எடைப்பிரிவின் கீழ் போட்டியிட்டு இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இந்தப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றமையும் குறிப்பிடத்தக்கது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago