2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

நெதர்லாந்துக்கெதிரான போட்டியில் மப்பே விளையாடுவது சந்தேகம்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 19 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், சனிக்கிழமை (22) நடைபெறவுள்ள நெதர்லாந்துக்கெதிரான குழு டி போட்டியில் பிரான்ஸின் அணித்தலைவர் கிலியான் மப்பே விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஒஸ்திரியாவுக்கெதிரான போட்டியில் 25 வயதான மப்பேயின் மூக்கு உடைவடைந்ததைத் தொடர்ந்தே மேற்குறித்த போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.

சத்திர சிகிச்சை தேவைப்பட்டிருந்தார் தொடரிலிருந்து மப்பே வெளியேறியிருப்பாரென்ற நிலையில், அதை மப்பே தவிர்த்ததாக பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் மீண்டும் திரும்பும்போது முகமூடியை அணியவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .