2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 27 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான போட்டியில் நியூசிலாந்தும் காணப்படுகின்ற நிலையில் அவ்வணிக்கு இத்தொடர் முக்கியத்துவமிக்கமானதாகக் காணப்படுகின்றது.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில் அவரைப் பிரதியிட்ட வில் யங்க் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில் அவரையே பிரதியிடுகிறார்.

மேலும் இத்தொடரும் ஓய்வு பெறுகின்ற டிம் செளதி மற்றும் மற் ஹென்றி, வில்லியம் ஓ ருர்க்கேயுடன் சகலதுறைவீரராக நாதன் ஸ்மித் களமிறங்குகிறார்.

மறுபக்கமாக இங்கிலாந்தில் சகலதுறைவீரரான ஜேக்கப் பெத்தெல் மூன்றாமிலக்கத்தில் அறிமுகத்தை மேற்கொள்வதோடு, ஒலி போப் விக்கெட் காப்பாளராக ஆறாமிடத்தில் களமிறங்குவதுடன் கிறிஸ் வோக்ஸ், குஸ் அட்கின்ஸன், பிறைடன் கார்ஸுடன் ஷொய்ப் பஷிர் பந்துவீச்சுவரிசையை அமைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .