2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந் நிலையில் மெல்பேணில் வியாழக்கிழமை (26) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஸ்டீவன் ஸ்மித்தின் 140, மர்னுஸ் லபுஷைனின் 72, சாம் கொன்ஸ்டாஸின் 60, உஸ்மான் கவாஜாவின் 57, அணித்தலைவர் பற் கமின்ஸின் 49, அலெக்ஸ் காரியின் 31 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 4, இரவீந்திர ஜடேஜா 3, ஆகாஷ் டீப் 2, வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, நிதிஷ் குமார் ரெட்டியின் 114, யஷஸ்வி ஜைஸ்வாலின் 82, சுந்தரின் 50, விராட் கோலியின் 36, ரிஷப் பண்டின் 28, லோகேஷ் ராகுலின் 24 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஸ்கொட் போலண்ட், கமின்ஸ், லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஜஸ்பிரிட் பும்ரா (4), மொஹமட் சிராஜ் (3), ஜடேஜாவிடம்  விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இன்றைய நான்காம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் லையன் 41 ஓட்டங்களுடனும், ஸ்கொட் போலண்ட் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக  லபுஷைன் 70, கமின்ஸ் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X