2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 10 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும் வென்ற நிலையில் பேர்த்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்ற நிலையிலேயே 2-1 என்ற நிலையில் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, நசீம் ஷா (3), ஷகீன் ஷா அஃப்ரிடி (3), ஹரிஸ் றாஃப் (2), மொஹமஸ் ஹஸ்னைனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 31.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்கு 141 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சைம் அயூப்பின் 42 (52), அப்துல்லாஹ் ஷஃபிக்கின் 37 (53), மொஹமட் றிஸ்வானின் ஆட்டமிழக்காத 30 (27), பாபர் அஸாமின் ஆட்டமிழக்காத 28 (30) ஓட்டங்களோடு 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் லான்ஸ் மொரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் றாஃப் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X