2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவை வெல்லுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கஹெபாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை தோல்வியடைந்த நிலையில் தொடரையும், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான வாய்ப்பைத் தக்க வைப்பதற்கும் இப்போட்டியில் வென்றாக வேண்டியுள்ளது.

குறிப்பாக துடுப்பாட்டமே சிக்கலாகவுள்ள நிலையில் சிரேஷ்ட வீரர்கள் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸிடமிருந்தும் அண்மைய நட்சத்திரங்களான பதும் நிஸங்க, கமிந்து மென்டிஸ் ஆகியோரிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அணியைப் பொறுத்த வரையில் மாற்றமிருக்காதென்றே நம்பப்படுகிறது.

மறுபக்கமாக தென்னாபிரிக்காவைப் பொறுத்த வரையில் காயமடைந்த ஜெரால்ட் கொயட்ஸியை டேன் பற்றர்சன் பிரதியிடுவதோடு, வியான் முல்டரை மத்தியூ பிறெட்ஸ்கி பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான ஆடுகளமானது இறுதி நாள்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகத்தை வழங்கலாமெனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .