2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செஞ்சூரியனில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் முன்னிலையிலுள்ள தென்னாபிரிக்கா, இந்த இரண்டு போட்டிகளிலொன்றை வென்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாமென்ற நிலையில் இத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

தென்னாபிரிக்க மண்ணில் பாகிஸ்தானின் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையென்ற நிலையில் நசீம் ஷா, குராம் ஷெஷாட், மிர் ஹம்ஸா, மொஹமட் அப்பாஸ் கூட்டணியானது தென்னாபிரிக்காவை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி பாபர் அஸாம், ஷண் மசூட், மொஹமட் றிஸ்வான், செளட் ஷகீல் ஆகியோர் போர்மிலுள்ள சைம் அயூப், அப்துல்லாஹ் ஷஃபிக்குடன் ஓட்டங்களைப் பெறுவதிலேயே பாகிஸ்தானின் பெறுபேறுகள் தங்கியுள்ளன.

இப்போட்டிக்கான ஆடுகளமானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகவே காணப்பட்டாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடரில் டொனி டி ஸொர்ஸி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், றயான் றிக்கெல்டன் ஆகியோர் சல்மான் அலி அக்ஹாவிடம் வீழ்ந்த நிலையில் அவர்கள் கவனத்துடன் துடுப்பெடுத்தாட வேண்டியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X