2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

தலைமைப் பயிற்சியாளர் றோஸை நீக்கிய லெய்ப்ஸிக்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


தலைமைப் பயிற்சியாளர் மார்கோ றோஸை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ஸிக் நீக்கியுள்ளது.

பொரூசியா மொச்சென்கிளெட்பாவுடனான புண்டெலிஸ்கா போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே றோஸை லெய்ப்ஸிக் நீக்கி இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஸொல்ட் லோவை நியமித்துள்ளது.

இரண்டரையாண்டுகள் லெய்ப்ஸிக்குடனிருந்து புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் லெய்ப்ஸிக் ஆறாமிடத்தில் இருக்கையில் றோஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் தோமஸ் துஷெலின் துணைப் பயிற்சியாளராக லோ பணியாற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X