2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ப்றூக்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்றூக் முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 178 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை ப்றூக் அடைந்துள்ளார்.

இதேவேளை இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 140 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ட்ரெவிஸ் ஹெட், 11ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 83 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் கமிந்து மென்டிஸ், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை மேற்படி இலங்கைக்கெதிரா டெஸ்டில் 154 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, 10ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஹரி ப்றூக், 2. ஜோ றூட், 3. கேன் வில்லியம்சன், 4. யஷஸ்வி ஜைஸ்வால், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. கமிந்து மென்டிஸ், 7. தெம்பா பவுமா, 8. டரைல் மிற்செல், 9. றிஷப் பண்ட், செளட் ஷ்கீல்.

இந்நிலையில் இந்தியாவுக்கெதிரான டெஸ்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான டெஸ்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் மற் ஹென்றி, 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. ஜொஷ் ஹேசில்வூட், 4. பற் கமின்ஸ், 5. இரவிச்சந்திரன் அஷ்வின், 6. இரவீந்திர ஜடேஜா, 7. நேதன் லையன், 8. பிரபாத் ஜெயசூரிய, 9. மற் ஹென்றி, 10. நோமன் அலி.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. இரவிச்சந்திரன் அஷ்வின், 4. ஷகிப் அல் ஹஸன், 5. மார்கோ ஜன்சன்.

இந்நிலையில் பங்களாதேஷுக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 103 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. றோஹித் ஷர்மா, 3. ஷுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஹரி டெக்டர், 6. டரைல் மிற்செல், 7. ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், 8. ஷே ஹோப், 9. பதும் நிஸங்க, 10. சரித் அசலங்க.

இதேவேளை பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குடகேஷ் மோட்டி, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 13ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. ஷகீன் ஷா அஃப்ரிடி, 3. கேஷவ் மஹராஜ், 4. குல்தீப் யாதவ், 5. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 6. மகேஷ் தீக்‌ஷன, 7. ஜஸ்பிரிட் பும்ரா, 8. மொஹமட் சிராஜ், 9. குடகேஷ் மோட்டி, 10. அடம் ஸாம்பா.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. சிகண்டர் ராசா, 3. ரஷீட் கான், 4. மெஹிடி ஹஸன் மிராஸ். 5. ஜெர்ஹார்ட் எரஸ்மஸ்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான், எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெவிஸ் ஹெட், 2. பில் ஸோல்ட், 3. திலக் வர்மா, 4. சூரியகுமார் யாதவ், 5. ஜொஸ் பட்லர், 6. மொஹமட் றிஸ்வான், 7. பாபர் அஸாம், 8. யஷஸ்வி ஜைஸ்வால், 9. பதும் நிஸங்க, 10. ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அடில் ரஷீட், 2. வனிது ஹசரங்க, 3. அடம் ஸாம்பா, 4. அகீல் ஹொஸைன், 5. மகேஷ் தீக்‌ஷன, 6. குடகேஷ் மோட்டி, 7. ரஷீட் கான், 8. ரவி பிஷ்னோய், 9. அர்ஷ்டீப் சிங்க், 10. பஸல்ஹக் பரூக்கி.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஹர்திக் பாண்டியா, 2. டிபேந்திர சிங் ஐரீ, 3. லியம் லிவிங்ஸ்டோன், 4. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், வனிது ஹசரங்க.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X