2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

’தனது சதத்தை பற்றி ஷ்ரேயாஸ் கவலைப்பட வேண்டாமென்றார்’

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 27 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் துடுப்பெடுத்தாடும்போது ஒரு ஓவர் இருக்கையில் பஞ்சாப்பின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இறுதி ஓவரை ஷஷாங்க் சிங் எதிர்கொள்ளும்போது ஒவ்வொரு பந்தையும் நான்கு, ஆறு ஓட்டங்களாக அடிக்குமாறும், தனக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்குவது குறித்து யோசிக்க வேண்டாமென ஷ்ரேயாஸ் தனதுக்கு கூறியதாக அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் 5, நான்கு ஓட்டங்களை அந்த ஓவரில் பெற்ற ஷஷாங்க் அந்த ஓவரில் 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பஞ்சாப் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X